மத்திய அரசு வழங்க வேண்டிய கல்வி நிதியை விடுவிக்கக்கோரிய தமிழக அரசின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே கல்வி நிதி வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளிப்படையாகவே அறிவித்தார். இந்த விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. சமக்ர சிக்ஷா திட்ட நிதி ரூ.2151.59 கோடி, அதற்கான 6 % வட்டி ரூ.139.70 கோடியும் சேர்த்து ரூ.2,291 கோடி வழங்க உத்தரவிட வேண்டுமென கடந்த மாதம் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்தது. மத்திய அரசு கல்வி நிதியை விடுவிக்காததால் தமிழ்நாட்டில் சுமார் 43 லட்சம் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ளதால் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று திமுக வழக்கறிஞர் பி. வில்சன் கோரிக்கை வைத்தார். ஆனால் நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, மன்மோகன் கொண்ட அமர்வு, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று கூறி மறுத்துவிட்டனர். இந்த வழக்கில் எந்த அவசரமும் இல்லை என்று கூறியுள்ளனர்.
Comments are closed.