முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி அரசு தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்று 4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இன்னும் ஒரு ஆண்டு எஞ்சியிருக்கிறது. அதற்குள் தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுக சட்டமன்ற தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. பூத் கமிட்டி கூட்டமும் நடத்தப்பட்டு வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயும் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளார். அதிமுக, பாரதிய ஜனதா கூட்டணி மீண்டும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க வருகிற சட்டமன்றத் தேர்தலில் தனித்து தான் போட்டியிடுவோம் என்று அறிவித்துள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாகை மாவட்டம் வேதாரணியம் சட்டமன்ற தொகுதிக்கு வேட்பாளரையும் அறிவித்து அரசியலில் அதிரடி காட்டியுள்ளார். வேதாரண்யம் தொகுதி வேட்பாளராக அக்கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.