Rock Fort Times
Online News

பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.1000 யாருக்கெல்லாம் கிடைக்கும்? கிடைக்காது?…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.
அதேபோல இந்த ஆண்டும் ரூ.1000 பணத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1000 ரொக்க பணம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், பண்டிகைக்கு முன்பாக பணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும், கிடைக்காது என்பதையும் அரசு தெளிவுபடுத்தி உள்ளது. அதன்படி மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் ஆகியவர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000 கிடையாது. மற்ற அனைத்து தரப்பினருக்கும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்