Rock Fort Times
Online News

முதலமைச்சர் விஜய்க்கு மாட்டு வண்டி ஓட்டிய அந்த நபர் யார்?* திமுக, அதிமுக சரமாரி கேள்வி…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான விஜய், இடைத்தேர்தல் நடைபெறும் தாராபுரத்தில் நேற்று (அக்டோபர் 4) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் தனது பிரச்சார வாகனத்தில் ரோடு ஷோ சென்றபோது, திடீரென தனது வாகனத்தை நிறுத்தி மாட்டு வண்டியில் பயணித்து வாக்குச் சேகரித்தார். அப்போது, மாட்டு வண்டியில் முதலமைச்சருடன் பயணித்தது தேடப்படும் குற்றவாளி என அரசியல் கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர். இதுதொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தலுக்கான எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல் நடைபெற்றுள்ளதாக அவர் மீது தவெக அரசு வழக்குப்
பதிவு செய்துள்ளது. தாராபுரத்திற்கு இரண்டாவது முறையாக முதலமைச்சர் விஜய், தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றிருந்தார். கடந்த காலங்களில் வராத முதலமைச்சர் விஜய், தாராபுரத்தில் இரண்டு முறை தேர்தல் பிரச்சாரம் செய்ய காரணம் என்ன? மாட்டு வண்டியில் அவருடன் இருந்தது யார்? அசோக் என்பவர்தான் மாட்டு வண்டியை ஓட்டுகிறார். அவர் தவெகவினரால் புகார் கொடுக்கப்பட்டுள்ள ஒரு தேடப்படும் குற்றவாளி. இது காவல்துறையினருக்கு தெரியாதா? உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்த நீங்கள், தேடப்படும் குற்றவாளி முதலமைச்சர் உடன் தான் இருக்கிறார், அவர் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா? அமைச்சர் கீர்த்தனா பள்ளிக்கூடக் குழந்தைகளைப் பிரச்சாரத்திற்கு அழைத்து வந்திருக்கிறார், அவர் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? சட்டம்- ஒழுங்கு எங்கே செல்கிறது, அப்போது முதலமைச்சரே குற்றவாளியைக் காப்பாற்றுகிறாரா? இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுக,

அதிமுக தரப்பில் கூறுகையில், ‘நேற்று முதல்வர் விஜய்யின் ரோடு ஷோ நிகழ்வில், கூட்டம் சேர்க்க வேண்டும் என்ற பெயரில், ‘ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும், வெளியூர் மாவட்டச் செயலாளர்களும் இத்தனை பேரை அழைத்து வர வேண்டும்’ என்ற இலக்கை கொடுத்துக் கூட்டத்தைக் கூட்டியுள்ளனர். முதல்வர் விஜய்யின் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையால் தேடப்பட்டு வரும் குற்றவாளியான ‘கொட்டிகாமலை’ அசோக் மீது வழக்கு உள்ளது. அவர் போலீசாரால் தேடப்படும் குற்றவாளி. முதல்வருடன் அவரே வண்டியை ஓட்டிச் செல்லும் அளவிற்கு மிக அருகிலேயே உள்ளார். இதுதான் தூய்மையான ஆட்சியா? . அந்த குற்றவாளி ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை?. இந்த ஆட்சி தூய்மையான ஆட்சி அல்ல, இது ஒரு ரீல்ஸ் ஆட்சி. இவ்வாறு அதிமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்