தமிழக சட்டப்பேரவையில் இன்று(07-09-2026) முதலமைச்சர் விஜய்,
திமுக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆவேசமாக பேசினார். முதலமைச்சர் விஜயின் பதிலுரைக்கு பேச வாய்ப்பு அளிக்க வேண்டும் என திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், முதலமைச்சர் பேசும்போது குறுக்கீடு செய்ததால் அவர்களுக்கு பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால், சட்டப்பேரவையில் இருந்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவைக்கு வெளியே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், 15 கேள்விகள் முதல்வரிடம் கேட்டிருந்தேன்; டைவர்ஷன் இல்லாமல் நேரடியாக பதில் சொல்ல கூறினேன். ஆனால் அதே ஆக்டிங், பஞ்ச் டயலாக் பேச்சுகள்; ரீல்ஸாக்காக மட்டுமே முதல்வர் பேசிவிட்டு சென்றுள்ளார். நாங்கள் வைத்த ஒரு கேள்விக்கு கூட முதல்வர் பதில் சொல்லவில்லை. எங்கள் கேள்விகளுக்கு திங்கட்கிழமை பதில் சொல்வேன் எனக்கூறி சென்றவர் தயாராக வருவார் என நினைத்தேன். மனப்பாடம் செய்துவிட்டு வந்து ஒப்புவித்தல் போட்டிபோல சட்டமன்றத்தில் பேசிவிட்டு சென்றுள்ளார். விஜயின் நண்பர், ஆலோசகர் விஷ்ணு ரெட்டி, அவருடைய மச்சான் சுஜய் ரெட்டி, அவருடைய பிஸ்னஸ் பார்ட்னர் அணில் ரெட்டி. இவர்கள் எல்லாம் சேர்ந்துதான் அரசு நடத்தும் சுரங்கங்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதன் ஆதாரங்கள் ஒவ்வொன்றாக வெளியிடுவேன். கொடநாட்டில் தனது பட ரிலீஸாக்காக வாட்ச்மேன் வேலை பார்த்தவர்தான் இந்த முதலமைச்சர். இவருக்கு மிசாவைப் பற்றி, எங்கள் தலைவரைப் பற்றி பேச 1% கூட தகுதி இல்லை. முதலமைச்சர் பேசி முடித்ததும் நாங்கள் பேச வாய்ப்பு கேட்டோம். முதலில் தருவதாக சொன்னார். பிறகு என்ன பிரஷர் வந்ததோ… முதலமைச்சர் முடிவா, இல்லை அமைச்சர்கள் யாரேனும் சொன்னார்களா என்று தெரியவில்லை. திடீரென்று சபாநாயகர் நாங்கள் பேசுவதற்கு அனுமதி மறுத்துவிட்டார். இதனால் வெளிநடப்பு செய்தோம் என்று கூறினார்.

Comments are closed.