அரசு அலுவலகங்களில் யாராவது லஞ்சம் கேட்டால் புகார் அளிக்க வாட்ஸ்அப் எண் அறிமுகம்… முதல்வர் விஜய் அதிரடி..!
தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதில் இருந்து அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிப்பதில் அதிக அக்கறை காட்டி வருகிறார். அண்மையில், கரூரில் நடைபெற்ற நிகழ்வில், அரசு அலுவலர்கள் யாராவது லஞ்சம் கேட்டால் கொடுக்க முடியாது…என்று தைரியமாக சொல்லுங்கள் உங்களுடன் நான் இருக்கிறேன் என்று பேசினார். முதல்வரின் இந்த பேச்சு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்த கட்டமாக
தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் யாரேனும் லஞ்சம் கேட்டால், அது தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க வாட்ஸ்அப் உதவி எண்ணை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாஅரச சாய்குமார் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “தமிழகத்தில் லஞ்சம் வாங்கப்பட்டால் அது தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க 94981 80936 என்ற எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து அரசு துறைகளின் இணையதளத்திலும் இந்த வாட்ஸ்அப் எண் இடம்பெற வேண்டும் என்றும். அதனுடன் லஞ்ச ஒழிப்பு துறையின் இணையதளத்தின் இணைப்பும் இடம்பெற வேண்டும் என்றும்” அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comments are closed.