Rock Fort Times
Online News

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் காமராஜர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை…!

முன்னாள் முதலமைச்சர், மறைந்த கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், இன்று (15.07.2026) சத்திரம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி
தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கழக மாணவர் அணி செயலாளர் வீரமணி ஜெய்குமார், மாநில மாணவரணி துணைச் செயலாளர் சோலைராஜ், கிழக்கு மாநகர தி.மு.க. செயலாளர் மு. மதிவாணன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் வண்ணை அரங்கநாதன், கே.என்.சேகரன், மாநில அணி நிர்வாகி செந்தில், பகுதி கழகச் செயலாளர் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். மேலும், மாவட்ட, மாநகர கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றியம், நகரம், பேரூர், வட்டம், வார்டு மற்றும் கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் ஏராளமான கழகத் தொண்டர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்