Rock Fort Times
Online News

சொத்துக் குவிப்பு வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்…!

ரூ.35.79 கோடி சொத்து குவிப்பு வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில், விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்காக, சி.விஜயபாஸ்கர் நவம்பர் 6 (வெள்ளிக்கிழமை) சென்னை மண்டல அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்றும், அவரது
மனைவியிடம் அடுத்த வாரம் விசாரணைக்கு வர வேண்டும் என்றும் அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. 2016 முதல் 2021-ம் ஆண்டு வரை சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது விஜயபாஸ்கர் சொத்து சேர்த்ததாக, 2021-ல் லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெறுகிறது. கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. ஏற்கனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு, அவர்களது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்