தமிழகத்தில் நாளை மறுநாள் (23.04.2026) சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் இறுதிக்கட்ட பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அங்கு இறுதி பிரச்சார கூட்டத்தில் பேசினார். அவரது உரையில், ”இதுவரை இந்த நிலத்தில் சாதி, மதம், சாராயம், பணம், திரைக்கவர்ச்சி இது தான் அரசியல். இந்த திமுக, அதிமுக ஆட்சியில் சலுகை, இலவசம், மானியம் இதுதான் இவர்கள் கொடுத்த திட்டங்கள். இதை அப்படியே தூக்கி எறிந்து விட்டு
தூய அரசியலை கொண்டு வர வேண்டும். இங்கு ஆள்தான் மாறுவார்கள். ஆட்சி முறை மாறாது. தீமைக்கு மாற்று மற்றொரு தீமை அல்ல. பாஜகவும், காங்கிரசும் வெவ்வேறு கட்சியா? கொடியில் வண்ணம் மாறும். ஆனால் அவர்கள் கொள்கையில் எண்ணம் மாறாது. பாஜகவும், காங்கிரசும் ஒன்று தான். தர்மத்தின் பக்கம் நிற்கும் நாங்கள் வெல்வோம்” என்றார்.

Comments are closed.