திருச்சி பொன்மலைபட்டி பகுதியில் அமைந்துள்ள புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ மாணவியருக்கு மொத்தம் 20399 விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்வினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். விழாவில் அவர் பேசுகையில் “கல்விக் கற்க எதுவும் தடை இல்லை” எனும் தன்னம்பிக்கையை மாணவச் செல்வங்களுக்கு விதைக்க, விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதாகவும், முதலாவதாக பள்ளி மாணவர்கள் நன்றாக சாப்பிட வேண்டும், விளையாட வேண்டும், நன்றாக படிக்க வேண்டும் என்பதை நமது தமிழக முதல்வர் மாணவர்கள் ஆன உங்களுக்கு வைக்கும் கோரிக்கையாகும் என உரையாற்றினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர், மா.பிரதீப் குமார் ஐ.ஏ.எஸ் மாநகராட்சி மண்டலக்குழு தலைவர் மண்டலம் 3.மு.மதிவாணன்,துணை மேயர் ஜி.திவ்யா, மாமன்ற உறுப்பினர்கள் இ.எம்.தர்மராஜ் கோ.ரமேஷ் , திருச்சி மாவட்டக் கல்வி அலுவலர் செல்வி மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.