Rock Fort Times
Online News

திருச்சியில் நீர்வளத்துறை தரக்கட்டுப்பாடு கோட்ட மையம் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு அரசின் 2021-22-ம் ஆண்டு நீர்வளத்துறை மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி திருச்சியில் நீர்வளத்துறை, தரக்கட்டுப் பாடு கோட்ட அலுவலகம் மற்றும் தலைமையிட உபகோட்ட அலுவலகம் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையொட்டி செங்குளம் காலனியில் நடைபெற்ற விழாவில் மாவட்ட கலெக் டர் பிரதீப் குமார் கலந்து கொண்டு பார்வையிட்டார். இந்த கட் டிடம் தரைதளம் மற்றும் முதல் தளத்தை சேர்த்து மொத்தம் 21 அறைகள் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மண்டலத்தலைவர் மு.மதிவாணன், நீர்வளத்துறை திருச்சி மண் டல தலைமை பொறியாளர் தயாளகுமார், கண்காணிப்பு பொறி யாளர், (நடுகாவிரி வடிநில வட்டம்) சிவக்குமார், செயற்பொறி யாளர் (தரக்கட்டுப்பாட்டுக்கோட்டம்) புகழேந்தி, உதவி செயற் பொறியாளர்கள் கார்த்திகேயன், ஜோதி, உதவி பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், அரசு அலு வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்