Rock Fort Times
Online News

பிரதமர் பாதுகாப்புக்கு ஸ்ரீரங்கம் வந்துள்ள போலீசாருக்கு கெட்டுப் போன உணவு வழங்கப் பட்டதா?…

மூன்று நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்று(19-01-2024) சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார். பின்னர் நேற்று இரவு தமிழக ஆளுநர் மாளிகையில் தங்கியிருந்த அவர் இன்று(20-01-2024) விமானம் மூலம் திருச்சி வந்தடைகிறார்.
அதனை தொடர்ந்து ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

பிரதமர், ஸ்ரீரங்கம் வருகையை ஒட்டி 3500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு இன்று காலை உணவு வழங்கப்பட்டது. அதனை பிரித்துப் பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.காரணம் அது கெட்டுப் போய் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த உணவை போலீசார் தவிர்த்து விட்டு ஓட்டலுக்கு செல்லலாம் என்றால் அங்கு பிரதமர் வருகையை ஒட்டி பாதுகாப்பு கருதி அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்ததால் பெரும் சிரமத்தை சந்தித்தனர். சிலர் காலை உணவு சாப்பிடாமலேயே பணியை தொடர்ந்தனர்.
ஏற்கனவே, கடந்த 2ஆம் தேதி திருச்சி விமான நிலைய புதிய முனைய திறப்பு விழா மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு இதேபோல தரம் குறைந்த உணவு வழங்கப்பட்டதாக தெரிகிறது.
தற்போது இரண்டாவது முறையாக இதே போல கெட்டுப்போன உணவு வழங்கப்பட்டதால் போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதேபோல, நேற்று ஸ்ரீரங்கத்தில் தூய்மை பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் வைத்து உணவு வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது போலீசாருக்கு கெட்டுப் போன உணவு வழங்கப்பட்டதால் இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்