தமிழக சட்டசபையில் திமுக உறுப்பினராக இருந்தவர் புகழேந்தி (71). இவர் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார்.
இவருக்கு ஏற்கனவே கல்லீரலில் புற்றுநோய் ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்தநிலையில், நேற்று இரவு அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடரந்து, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சிறப்பு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று(06-04-2024) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தீவிர கட்சிப் பணியில் ஈடுபட்டிருந்த அவர் விக்கிரவாண்டி அருகே நடைபெற்ற முதல்வர் பிரசாரக் கூட்டத்திலும் பங்கேற்றார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புகழேந்தி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திமுகவினர் மருத்துவமனையில் குவிந்தனர். இதனால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் மட்டுமின்றி விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்த புகழேந்தி திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.