விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினம் – கட்சி பேதமின்றி அஞ்சலி செலுத்திய அரசியல் கட்சியினர் ! திருச்சியில் நெகிழ்ச்சி !
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர் மறைந்த விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நாளை ( டிச.28 ) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட தேமுதிக துணை செயலாளர் ப்ரீத்தா விஜய் ஆனந்த் தலைமையில் பொன்மலைப்பட்டியில் வியகாந்துக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேமுதிக நிர்வாகிகள் மட்டுமில்லாமல் பேதமின்றி அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிந்து மலரஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் டி.வி கணேஷ், தொழிற்சங்கம் திருப்பதி, மாவட்ட பொருளாளர் மில்டன் குமார், பகுதி செயலாளர் அருள்ராஜ், வட்ட செயலாளர் செந்தில்குமார், இமானுவேல், கோபாலகிருஷ்ணன், அகஸ்டின் நிக்கோலஸ், திமுக சார்பில் மாமன்ற உறுப்பினர்கள் இ.எம் தர்மராஜ், கோ.ரமேஷ், அதிமுக பகுதி செயலாளர் பாலசுப்ரமணியம், வட்ட செயலாளர் நாகராஜ், காங்கிரஸ் பகுதி செயலாளர் எட்வின், பிஜேபி பாலகுமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொன்னுதுரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கார்த்திகேயன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த சேகர், தமிழக வெற்றிக்கழகம் கணேஷ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்ணன், அகில பாரத இந்து மகா சபா மணிகண்டன், மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
Comments are closed.