Rock Fort Times
Online News

இடைத்தேர்தல் களம் தவெகவுக்கு சாதகமாக இல்லாததால் தான் விஜய் தெரு தெருவாக செல்கிறார்…- பெ.சண்முகம்…!

இடைத்தேர்தல் களம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக இல்லாததால் தான் முதல்வர் விஜய் தெரு தெருவாக செல்கிறார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம், “தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் தவெகவுக்கு சாதகமாக இல்லை. இடைத்தேர்தல் களம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக இல்லாததால் தான் முதல்வர் விஜய் தெரு தெருவாக செல்கிற அளவுக்கு நிலைமை இருக்கிறது. போட்டி கடுமையாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. நம்பி வாக்களித்தோம், இப்படி பொறுப்பற்ற முறையில் ராஜினாமா செய்துவிட்டார்கள் என்றுதான் தவெக வேட்பாளர்களை மக்கள் விரட்டி அடிக்கிறார்கள். தவெக சார்பில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுகிறது. தேர்தல் ஆணையம் முறையாக செயல்படவில்லை. தூய சக்தி அடையாளத்தை த.வெ.க அழித்து ஒழிக்கிறது. தன்னை தூய சக்தி என கூறிக்கொண்டு வாக்காளர்களுக்கு தவெக பணம் கொடுக்கிறது. தவெகதான் வாக்குக்கு அதிக பணம் கொடுத்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்” என்றார். கம்யூனிஸ்டு கட்சிகள் விஜய் அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்