திருச்சி, கே.கே நகரின் புதிய லேண்ட் மார்க் ஜெயம் எம்பயர்…* அப்பார்ட்மெண்ட் ஹேண்ட் ஓவர் நிகழ்ச்சியில் வாடிக்கையாளர்கள் நெகிழ்ச்சி..!
திருச்சியில் இயங்கி வரும் முன்னணி கட்டுமான நிறுவனங்களில் ஒன்று ஜெயம் பில்டர்ஸ். கடந்த 23 ஆண்டுகளாக இத்துறையில் செயல்பட்டு வரும் இந்நிறுவனம் இதுவரை பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகளையும், தனி வீடுகளையும், வணிக வளாகங்களையும் கட்டியுள்ளது. அந்த வகையில், தற்போது திருச்சி கே.கே நகர், எல்ஐசி காலனி, பாண்டியன் நகரில் “ஜெயம் எம்பயர்” என்கிற பெயரில் 175 வீடுகளைக் கொண்ட பிரம்மாண்டமான அப்பார்ட்மெண்ட்டை நிறுவியுள்ளது. இதற்கான “ஹேண்ட் ஓவர்” நிகழ்ச்சி நேற்று(அக்டோபர் 2) நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்தவர்களை ஜெயம் பில்டர் நிர்வாக பங்குதாரரான ஆனந்த், நிர்வாக இயக்குனரான ஜெயராணி ஆனந்த்ஆகியோர் வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் எஸ்பிஐ வங்கியின் திருச்சி மண்டல துணை மேலாளர் சந்தீப்தா குமார் நாயர், மண்டல மேலாளர் ஜே. ரேணுகா, மதுரை மண்டல பிசினஸ் ஹெட் பாலமுரளி கிருஷ்ணா, தினமலர் ஆசிரியர் ராமசுப்பு, கிரடாய் அமைப்பின் துணைத்தலைவர், வி.கோபிநாதன், திருச்சி சேர்மன் ஆர்.மனோகரன், கீ ஸ்டோன் ஆர்கிடெக்ட் வீ.ஜனார்த்தனன,ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். முழுவதும் கேட்டட் கம்யூனிட்டியாக கட்டமைக்கப்பட்டுள்ள இவ்வளாகத்திற்குள் சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்கா, வாக்கிங் ஏரியா, ஜிம், பேட்மிண்டன் கோர்ட், சூப்பர் மார்க்கெட், கோவில், சிசிடிவி கேமரா,எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் பாயின்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இங்கிருந்து திருச்சி ஏர்போர்ட், பஞ்சப்பூர் பேருந்து நிலையம், சத்திரம் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அதிகபட்சமாக 15 நிமிடங்களுக்குள் சென்று விட முடியும் என்பதாலும், அப்பார்ட்மெண்டிற்கு அருகிலேயே பல்வேறு முன்னணி நிறுவனங்களின் பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்தும் இருப்பதாலும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
இவ்விழாவில் சாமி பில்டர்ஸ் நிர்வாக இயக்குனர் இளமுருகன், ஏ.ஒன் ஹோட்டல் ஆறுமுகசாமி மற்றும் தொழிலதிபர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் ,
அரசு அதிகாரிகள் நண்பர்கள் நலன் விரும்பிகள்,

வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கு வந்திருந்தவர்களுக்கு சுடச்சுட சைவ மற்றும் அசைவ உணவுகள் பஃபே முறையில் பரிமாறப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஜெயம் பில்டர்ஸ் நிர்வாகிகளும், ஊழியர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

Comments are closed.