“தந்தைக்கு தனயன் எழுப்பிய மண்டபமல்ல, தலைவனுக்கு தொண்டன் கட்டிய தாஜ்மஹால்”- கலைஞர் நினைவிடம் குறித்து கவிஞர் வைரமுத்து…!
சென்னை மெரினா கடற்கரையில் அதி நவீன தொழில்நுட்பங்களுடன் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நினைவிடத்தை பார்வையிட்ட கவிஞர் வைரமுத்து, X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,”கலைஞர் நினைவிடம் கண்டு சிலிர்த்தேன். கலைஞரின் கையைப் பிடித்துக்கொண்டே கலைஞர் நினைவிடம் சுற்றிவந்த உணர்வு. இது, தந்தைக்குத் தனயன் எழுப்பிய மண்டபமல்ல, தலைவனுக்குத் தொண்டன் கட்டிய தாஜ்மஹால்“. இப்படியோர் நினைவிடம் வாய்க்குமென்றால் எத்தனை முறையும் இறக்கலாம்”. கலைஞர் கண்டிருந்தால் கவிதை பாடியிருப்பார் உருவமாய் ஒலியாய் புதைத்த இடத்தில் கலைஞர் உயிரோடிருக்கிறார் உலகத் தரம்நன்றி தளபதி,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.