வைகை எக்ஸ்பிரஸ் இனி ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனை அமல் படுத்தும் விதமாக சோதனை நிறுத்தமானது வருகின்ற 16/09/23 ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நடைபெறுகிறது. அதன்பின், ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நிரந்தரமாக வைகை விரைவு ரயில் நின்று செல்ல தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக அனுமதியளிக்கும். இம்மாத இறுதிக்குள் இதனை நடைமுறைப்படுத்த தெற்கு ரயில்வே தீவிரம் காட்டி வருகிறது. இந்த ரயில் (வண்டி எண் 12635) சென்னை எழும்பூரில் இருந்து பகல் 1.50 மணிக்கு புறப்பட்டு மாலை 6.05 மணிக்கு ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் வந்தடையும். மறு மார்க்கமாக (வண்டி எண் 12636) மதுரையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு காலை 9.36 மணிக்கு ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் வந்தடையும்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.