திருச்சி தெற்கு ரெயில்வே கோட்டத்தில் 15 ரெயில் நிலையங்கள் உள்ளன. இதில் ஸ்ரீரங்கம் ரெயில் நிலையம் அமிர்த் பாரத் ரெயில் நிலைய திட்டத்தின்கீழ் ரூ.6.18 கோடியில் புனரமைக்கப்படுகிறது. ரெயில் நிலைய நுழைவு வாயில், பயணிகள் காத்திருப்பு அறை, நவீன உட்கட்டமைப்பு வசதிகள், டிக்கெட் கவுண்ட்டர்கள் போன்றவை புதுப்பிக்கப்படுகிறது. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தின் சுற்றுப்புற பகுதிகளை தூய்மைபடுத்தி தற்போதுள்ள முனைய கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு புதிய நுழைவு வாயில் கட்டப்படுகிறது. இதில் சிறப்பு அம்சமாக ரெயில் நிலைய முகப்பு தோற்றத்தில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மாதிரி வடிவம் உருவாக்கப்படுகிறது. மேலும் ரெயில் நிலையம் முன்பு செல்பி பாயிண்ட் அமைக்கப்படுகிறது. பயணிகளின் பயன்பாட்டிற்காக புதிய கழிவறைகள் கட்டப்படுகிறது. பிளாட்பாரம், பெஞ்சுகள், கூடுதல் தண்ணீர் குழாய்கள் புதிதாக அமைக்கப்பட உள்ளது. ரெயில் பயணிகளின் வசதிக்காக கார் மற்றும் இருசக்கர வாகனம் நிறுத்தும் இடம் உருவாக்கப்படுகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.