Rock Fort Times
Online News

ஜெம் வீரமணி நிகழ்ச்சியில் த.வெ.க. அமைச்சர்கள் 2 பேர் பங்கேற்பு…* ‘பகீர்’ கிளப்பிய இபிஎஸ்..!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று(26-09-2026) செய்தி யாளர்களிடம் கூறுகையில்,
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் முதலமைச்சர் விஜய்?. தவெக ஆட்சியில் 4 மாதங்களில் 300க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆட்சியில் குற்றவாளிகள் அச்சமின்றி நடமாடுகின்றனர். நீதிமன்ற உத்தரவின்பேரில்தான் ஜெம் கிரானைட் வீரமணி கைது செய்யப்பட்டுள்ளார். தன் உத்தரவின்படி கைது செய்யப்பட்டுள்ளதாக விஜய் கூறியது அப்பட்டமான பொய். அரசியல் ஆதாயம் தேடுவதற்காக தேர்தல் பிரசாரத்தில் தவறான கருத்தைக் கூறியுள்ளார். ஜெம் வீரமணி பங்கேற்ற நிகழ்ச்சியில் தவெகவின் 2 அமைச்சர்கள் பங்கேற்றனர். அதில் பேசிய வணிகவரித்துறை அமைச்சர், வீரமணி எனது குடும்ப நண்பர் என பேசி உள்ளார். இந்த 3 மாதம் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு, ஏற்கனவே போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட வழக்கை இழுத்தடிப்பதற்கான காரணம் என்ன? 3 மாத காலமாக வாய்தா ஏன் வாங்கினார்கள்? நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்