Rock Fort Times
Online News

இந்திய ஜவுளி வர்த்தகத்தின் மஹாராஜாவாக “மெஜஸ்டிக் மஹாராஜா” மிளிரும்…* திருச்சியில் நடைபெற்ற திறப்பு விழாவில் பாடலாசிரியர் வைரமுத்து புகழாரம்..! 

ஜவுளி உலகில் 90 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட மெஜஸ்டிக் மஹாராஜா குழுமம், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே சுமார் 1 லட்சம் சதுரடி பரப்பளவில் தனது 8வது கிளையை பிரம்மாண்டமாக நிறுவியுள்ளது. வருகிற அக்டோபர் 2ம் தேதி திறப்பு விழா காணவிருக்கின்ற இந்நிறுவனத்தின் முன்னோட்ட திறப்பு விழாவானது இன்று நடைபெற்றது. மெஜஸ்டிக் மஹாராஜா குடும்பத்தினர்களான சௌகத் அலி, அன்வர்தீன், ரஃபி,பஷீர் ஆசிப், ஜியாவுதீன், ஹஷ்ரப், அப்ரர்,நவீத், இர்ஷாத், உவைஸ், ஸுஹைல் ஆகியோர் புதிய கிளையை திறந்து வைத்தார்கள். விழாவிற்கு வந்திருந்தவர்களை இணை நிறுவனர்களில் ஒருவரான ரஃபி வரவேற்றார். பிரபல தமிழ் திரைப்பட பாடலாசிரியரும், ஞானபீட விருது பெற்றவருமான வைரமுத்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாழ்த்தினார். அப்போது அவர் பேசும் போது, ஜவுளி உலகில் 90 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட மெஜஸ்டிக் மஹாராஜா குடும்பத்தினரோடு எனக்கு 40 ஆண்டுகளுக்கும் மேலான பாசப்பிணைப்பு உண்டு. மூன்று தலைமுறையை கடந்து தற்போது நான்காவது தலைமுறையால் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தப்படும் மெஜஸ்டிக் மஹாராஜா,  ஜவுளி உலகின் இன்னும் பல்வேறு உச்சங்களை தொட வேண்டும். டெல்டாவின் தலைநகரமாக இருக்கும் திருச்சியில் தங்களது நிறுவனத்தை ஆரம்பிக்க வேண்டும் என்கிற 30 ஆண்டு கனவை தற்போது மஹாராஜா குழுமத்தினர் வெற்றிகரமாக சாத்தியப்படுத்தியுள்ளனர்.

அதுவும் வெறும் 7 மாதத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த பிரம்மாண்டமான ஜவுளி ஷோரூமை சாத்தியப்படுத்தி காட்டி இருப்பது உண்மையாகவே பாராட்டுதலுக்குரியது.இவ்விழாவில் பங்கேற்று வாழ்த்த வருகை தந்திருக்கும் குஜராத், மும்பை, அகமதாபாத், டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சார்ந்த ஏஜெண்டுகளும், சக தொழில்புரிவோரும் வந்திருப்பது வாழ்த்துதலுக்குரியது. அந்த வகையில், திருச்சியில் புதிதாக துவக்கப்பட்டுள்ள மெஜஸ்டிக் மஹாராஜா திருச்சிக்கு மட்டுமல்ல, இந்திய ஜவுளி உலகின் மகாராஜாவாகவும் நிச்சயம் மிளிரும் என பேசினார்”. முன்னதாக ஏழு மாதங்களில் கட்டுமான வேலைகளை முடித்து வெற்றிகரமாக ஹேண்ட் ஓவர் செய்த இன்ஜினியர்கள், ஆர்கிடெக்டுகள் உள்ளிட்ட பல்வேறு பணியாளர்கள் மேடைக்கு அழைத்து பாராட்டப்பட்டனர். இவ்விழாவில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், திருச்சியின் முக்கிய பிரமுகர்களான சாமி பில்டர்ஸ் இளமுருகன், கேர் அகாடமி நிறுவனர் பேராசிரியர் முத்தமிழ் செல்வன், பாம்பே ஸ்வீட்ஸ் நிறுவனர் சுப்ரமணிய சர்மா, ஸ்ரீதர் பாரதி போட்டோகிராபி ஸ்ரீதர்,பிளாக் அண்ட் ஒயிட் ஏஜென்சி அருண், திருச்சி எஸ்ஸார் ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் எஸ்.ரபிக் அகமது மற்றும் பல்வேறு கட்டுமான நிறுவனங்களின் உரிமையாளர்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், நண்பர்கள் உறவினர்கள், நலன் விரும்பிகள், அரசுத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று வாழ்த்தினர். இதற்கான ஏற்பாடுகளை மெஜஸ்டிக் மஹாராஜா நிர்வாகிகளும், ஊழியர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்