Rock Fort Times
Online News

பட்டமளிப்பு விழாவில் மின்தடை: அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி?* மு.க. ஸ்டாலின் கேள்வி..!

மதுரையில் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்துகொண்ட அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. மாநிலத்தில் சமீபமாக அதிகளவில் மின்வெட்டு ஏற்படுவதாக பொதுமக்களும், எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும்நிலையில், மின்சாரத் துறை அமைச்சரின் நிகழ்ச்சியிலேயே மின்வெட்டு ஏற்பட்டதாக பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், பட்டமளிப்பு விழா நடந்த கல்லூரி வளாகத்தில் ஜெனரேட்டர் மூலமாகவே மின்சாரம் இயக்கப்பட்டதாகவும், ஒரு ஜெனரேட்டரிலிருந்து மற்றொரு ஜெனரேட்டருக்கு மின்சாரம் மாற்றப்பட்டபோது 5 வினாடிகள் மட்டும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார். அமைச்சரின் நிகழ்ச்சியில் மின்வெட்டு குறித்து முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கூறியிருப்பதாவது; தவெக ஆட்சியில் அமைச்சர் பெருமக்களுக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் கதி என்ன என்பதைச் சொல்லவே தேவையில்லை. இரண்டு நாட்களுக்கு முன், மின்வாரியத் தலைமையகத்தில் முதல்வர் ஆய்வு செய்யவில்லை. ரீல்ஸ் எடுத்துவிட்டு வந்திருக்கிறார் போல என்று விமர்சித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்