கோடை காலத்தை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆணையின்பேரில் அதிமுக நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல் திறந்து பொதுமக்களுக்கு நீர்மோர், பழங்கள், குளிர்பானங்கள் வழங்கி வருகின்றனர். அதேபோல, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில், அரியமங்கலம் சரோஜா தியேட்டர் எதிரில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்பியு மான ப.குமார் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர், தர்பூசணி, பழங்கள், மற்றும் குளிர்பானங்களை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் கோட்டத் தலைவர் ஏ.பி.கிருஷ்ணமூர்த்தி, 37வது வட்டச் செயலாளர் என்.எஸ்.பி.ரவிசங்கர் ஆகியோர் செய்திருந்தனர்.

இந்நிகழ்வில் பகுதிச்செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், அதிமுக நிர்வாகிகள், ஐ.டி. விங் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.