Rock Fort Times
Online News

விளையாட்டு போட்டியில் திருச்சி ஊர் காவல் படை வீரர்கள் சாதனை..

தமிழ்நாடு ஊர் காவல் படையில் பணியாற்றும் வீரர்- வீராங்கனைகளுக்கான மாநில அளவிலான 28-வது தொழில் திறன் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் வேலூர் சரகம் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்றது . இப்போட்டியில் திருச்சி மாவட்டம் சார்பாக வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில், ஆண்கள் துப்பாக்கி சுடுதலில் முதலிடத்தையும், பெண்கள் பிரிவில் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். மேலும், ஆண்கள் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடத்தையும், துணை வட்டாரத் தளபதி முத்துமாலா தேவி பிஸ்டல் துப்பாக்கி சுடுதலில் இரண்டாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்தனர். அவர்கள் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமாரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஆயுதப்படை திருச்சி மாவட்ட வட்டாரத் தளபதி சய்ஃப், ஆகியோர் உடன் இருந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்