திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, மருதாண்டகுறிச்சி பகுதியை சேர்ந்தவர் மோகன் என்கிற மோகனசுந்தரம் ( வயது 22). இவர் கடந்த மே மாதம் 17-ம் தேதி கோவில் திருவிழா ஒன்றில் பக்தர்களிடம் திருடிய வழக்கில் சோமரசம்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் பல்வேறு திருட்டு வழக்கில் தொடர்புடையவர் என்பதும், தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடக்கூடும் என்றும் விசாரணையில் தெரிய வந்ததால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய சோமரசம்பேட்டை போலீசார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு பரிந்துரைத்தனர். இதையடுத்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவிட்டார். இதற்கான நகல் மோகன சுந்தரத்திடம் வழங்கப்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.