திருச்சி,பாலக்கரையீல் சீட்டு நடத்தி ரூ 3 கோடி மோசடி: காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்
திருச்சி பாலக்கரை காவேரி தியேட்டர் டீ கடை நடத்தி வருபவர் M.R. ராஜா ( 45 )த/ பெயர். மணி மற்றொரு தொழிலாக வேர் ஹவுஸ் பகுதியில் ஒரு சிட் பண்டு நிறுவனம் நடத்தி வருகிறார் இதில் பாலக்கரை, மல்லிகைபுரம், எடத்தெரு, செந்தண்ணீர்புரம், முதலியார் சத்திரம், கூனி பஜார், துரைசாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தீபாவளி,பொங்கல், ரம்ஜான், அட்சய திருதியை போன்ற பண்டிகைக்கால சீட்டுகளுக்கு பணம் செலுத்தி வந்தனர். இந்த நிறுவனம் ரூ. 1 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை சீட்டு பணம் வசூல் செய்துள்ளனர். அந்த வகையில் 1500க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் ரூ3 கோடி அளவுக்கு சீட்டு பணம் வசூல் செய்யப்பட்டதாக தெரிகிறது .பின்னர் அதற்கான முதிர்வு தேதி வந்த பின்னரும் கடந்த மூன்று மாத காலமாக சீட்டு பணத்தை திரும்ப வழங்காமல் ஏமாற்றி வந்துள்ளனர். இது தொடர்பாக பலமுறை முறையிட்டும் சம்பந்தப்பட்டவர்கள் கேட்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இன்று பாலக்கரை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இந்த முற்றுகை போராட்டத்தால் பாலக்கரை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.