திருச்சி மாநகராட்சி துணை மேயர் ஜி.திவ்யா தனக்கோடி மற்றும் சமயபுரம் அருகே உள்ள சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் பொது மருத்துவ முகாம் திருச்சி செங்குளம் காலனி அருகே உள்ள ஆட்டுக்கார தெரு நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் இன்று(12-03-2024) நடைபெற்றது. முகாமை துணை மேயர் திவ்யா தனக்கோடி தொடங்கி வைத்தார்.
முகாமில், மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டு மகளிர் மகப்பேறு சிகிச்சை, குழந்தைகள் நல சிகிச்சை, காது, மூக்கு தொண்டை மருத்துவம், குழந்தை இன்மைக்கான சிறப்பு சிகிச்சை அளித்ததோடு தகுந்த ஆலோசனை வழங்கினர்.
முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு இசிஜி இலவசமாக எடுத்து பார்க்கப்பட்டது. இம்மருத்துவமனை சார்பில் இலவசமாக பிரசவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அன்பு பரிசாக ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. அதோடு ஒரு வருட இலவச தடுப்பூசி போடப்படுகிறது. மிகக் குறைந்த செலவில் ஐயூஐ மூலம் கருவு றுதலுக்கான சிகிச்சை அளிக்கப்படும். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மிகக் குறைந்த செலவில் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதில், வட்ட கழக செயலாளர்கள் முனைவர் கோவிந்தராஜ், பி.சி.எடிங்டன், மாவட்ட பிரதிநிதி முகேஷ்குமார், கழக நிர்வாகிகள் ராஜகோபால், கிருஷ்ணகுமார், கணேஷ், எம்.எஸ்.எம்.செந்தில், கார்த்தி, ஜெரி, வெங்கடேஷ், மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.