Rock Fort Times
Online News

ம.ஜ.க. மாநில துணை செயலாளராக திருச்சி முகமது ஷரிப் நியமனம்…!

மனிதநேய ஜனநாயக கட்சியின் இளைஞர் அணி மாநில செயலாளராக பணியாற்றி வந்தவர் திருச்சி முகமது ஷரிப். இந்தநிலையில் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ தலைமையில் செயல்படும் ஆட்சி மன்ற குழுவின் முடிவுக்கு ஏற்ப முகமது ஷரிப், கட்சியின் மாநில துணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு மனிதநேய ஜனநாயக கட்சி அனைத்து பிரிவு நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென கட்சியின் பொதுச் செயலாளர் முகமது நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார். மாநில துணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள முகமது ஷரிப், கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரியை சந்தித்து வாழ்த்து பெற்றார். முகமது ஷரிப்பிற்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சால்வை அணிவித்தும், பூச்செண்டுகள் வழங்கியும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்