Rock Fort Times
Online News

தடகளப் பிரிவில் பி.டி. உஷாவின் 42 ஆண்டுகால சாதனையைத் தகர்த்த தமிழக வீராங்கனை…* வெண்கலம் வென்று அசத்தல்..!

ஜப்பானில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் தடகளப் பிரிவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ் வரலாற்று சாதனையை படைத்துள்ளார். மகளிருக்கான 400 மீட்டர் தடை ஓட்டப் பந்தயத்தின் இறுதிப்போட்டியில்வித்யா ராம்ராஜ் பங்கேற்றார். இதில் சிறப்பாக செயல்பட்ட அவர், பந்தய தூரத்தை வெறும் 54.75 வினாடிகளில் கடந்து மூன்றாம் இடத்தைப் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார். இதுதவிர, இந்திய தடகள வரலாற்றில் மிக நீண்ட காலமாக முறியடிக்கப்படாமல் இருந்த பி.டி. உஷாவின் தேசிய சாதனையையும் அவர் முறியடித்து அசத்தியுள்ளார். முன்னதாக கடந்த 1984-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியின் இறுதிச்சுற்றில், பி.டி. உஷா 400 மீட்டர் தடை ஓட்டத்தை 55.42 வினாடிகளில் கடந்து தேசிய சாதனை படைத்திருந்தார். இப்போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் மரியம் கரீம் 54.31 வினாடிகளில் கடந்து புதிய தொடர் சாதனையுடன் தங்கப் பதக்கத்தையும், கஜகஸ்தானின் அதெலினா ஜெம்ஸ் (54.58 வினாடிகள்) வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றினர். இப்போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனையான அனு ராகவன் 55.88 வினாடிகளில் கடந்து தனது சிறந்த தனிநபர் செயல்பாட்டுடன் 5-வது இடத்தைப் பிடித்தார்.
28 வயதான வித்யா ராம்ராஜிற்கு இந்த நடப்பு ஆசிய விளையாட்டுத் தொடரில் கிடைக்கும் இரண்டாவது பதக்கம் இதுவாகும். முன்னதாக நடைபெற்ற 4×400 மீட்டர் கலப்புத் தொடர் ஓட்டப் பிரிவில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வெல்ல இவர் முக்கியக் காரணமாக அமைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து வித்யா ராம்ராஜுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்