திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்…* மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்க உத்தரவு!
திருச்சி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று(06.07.2026) மேயர் மு.அன்பழகன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில், மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள். மனுக்களை பெற்றுக் கொண்ட மேயர், அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி துரித நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். இந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாநகராட்சி துணை மேயர் ஜி.திவ்யா தனக்கோடி,
ஆணையர் வீர் பிரதாப்சிங், மண்டலத் தலைவர்கள் துர்காதேவி, பி. ஜெய நிர்மலா , நகரப் பொறியாளர் அண்ணாதுரை மற்றும் செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.

Comments are closed.