Rock Fort Times
Online News

சாதி ஆணவப் படுகொலையை தடுக்க தனி சட்டம் – அமைச்சர் வன்னிஅரசு உறுதி…!

மறைந்த முன்னாள் இந்திய துணை பிரதமர் பாபு ஜெகஜீவன் ராமின் 40-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, சென்னை எழிலகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 1971-ல் இந்தியா – பாகிஸ்தான் யுத்தத்தின் போது இந்தியாவின் வலிமையை உலகிற்கு வெளிக் காட்டியவர் பாபு ஜெகஜீவன் ராம். இந்தியா பல்வேறு போர்களில் வெற்றிகளை அடைந்திருக்கிறது என்றால் அதற்கு அன்றைய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த இவருடைய யுக்தி தான் காரணம். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் இடஒதுக்கீட்டை நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தியவர் இவர். இந்தியா முழுக்க இருக்கிற பட்டியலின மற்றும் பழங்குடி மக்களின் உரிமைக்காக பணியாற்றியவர். ஜெகஜீவன் ராமின் புகழை யாராலும் மறைக்க முடியாது. தொடர்ந்து தமிழக அரசு சார்பில் அவருக்கு மரியாதை செலுத்தப்படும்” என்றார். தொடர்ந்து பேசிய அமைச்சர், “மயிலாடுதுறையில் நிகழ்ந்த கொலை சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் ஆணவ படுகொலை விவகாரத்தில் கட்டாயமாக நடவடிக்கை எடுக்கப்படும். ஆணவப் படுகொலைகளை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். சாதி ஆணவப் படுகொலையை தடுக்க தனி சட்டம் வேண்டுமென பேரவையின் முதல் நாளிலேயே பேசி இருக்கிறோம். இந்த முறை பேரவை கூடும்போது இது குறித்து நான் நிச்சயம் வலியுறுத்துவேன். எப்பாடுபட்டாவது சாதி ஆணவ படுகொலையை தடுக்க தனி சட்டம் இயற்றுவதில் உறுதியாக உள்ளோம்” என தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்