தஞ்சாவூர் ஆர். சுத்திப்பட்டு நுகர்பொருள் வாணிபக் கழகத் திறந்தவெளி குடோனில் ஏராளமான நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இந்த நெல் மூட்டைகள் இன்னும் அரவைக்கு அனுப்பப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் இன்று(ஜூலை 6) திடீரென நெல் மூட்டைகள் சரிந்து விழுந்ததில் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த சின்னப்பொண்ணு (51) என்ற பெண் தொழிலாளி சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறிப் பலியானார். மேலும் சகுந்தலா என்ற பெண், பலத்த காயங்களுடன் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த பெண் தொழிலாளி குடும்பத்தினருக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், கொள்முதல் செய்த நெல்மூட்டைகளை உடனுக்குடன் அரவைக்கு அனுப்ப வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர்.

Comments are closed.