பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக மீட்பு குழு சார்பில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அப்பொழுது இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் குப.. கிருஷ்ணன் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து ஓ பன்னீர்செல்வத்திடம் நிருபர்கள் கேள்வி கேட்டதற்கு அவர் வருவார்,வருவார் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். இந்நிலையில் அதிமுக மீட்பு குழு சார்பில் வெளியான அழைப்பிதழிலில் முன்னாள் அமைச்சர் குப கிருஷ்ணன் பெயரும் இடம்பெற்று இருந்தது இந்த நிலையில் அவர் கலந்து கொள்ளாதது அதிமுக மீட்பு குழு தொண்டர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சமீப காலமாக முன்னாள் அமைச்சர் குபகிருஷ்ணன்அதிமுக மீட்பு குழுநிகழ்ச்சியில் கலந்து கொள்வது தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது .இந்த நிலையில் அவர் ஓபிஎஸ் அணியிலிருந்து விலகினாரா ?என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கிடையில் இன்று மாலை முன்னாள் அமைச்சர் குபகிஷ்ணன் தனது ஆதரவாளுடன் மாலை அணிவிக்க வருவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
1
of 872
Comments are closed.