Rock Fort Times
Online News

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை பெற்று தந்தவர் ஜெயலலிதா- திருச்சியில் ஓ.பி.எஸ்.பேட்டி…!

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1349 -வது சதய விழாவை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவரது உருவ சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  இந்நிகழ்வில் இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சரும், அமைப்புச் செயலாளருமான வெல்லமண்டி நடராஜன், மாவட்டச் செயலாளர்கள் ராஜ்மோகன், ரத்தினவேல், சாமிக்கண்ணு, அவைத்தலைவர் வக்கீல் ராஜகுமார், திருச்சி மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  பின்னர், ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,  முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை பெற்றுத் தந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்றார்.  அப்போது, மத்திய அரசுடன் கூட்டணியில் உள்ள நீங்கள் முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக வலியுறுத்துவீர்களா? என்ற கேள்விக்கு காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புப்படி மத்திய அரசு முடிவெடுக்கும். தமிழக அரசும், இது தொடர்பாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என பதிலளித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்