பயணிகளின் நலன்கருதி திருச்சி-கரூர்-சேலம் ரயில்கள் இணைத்து இயக்கப்படுகின்றன. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில்,
திருச்சி-கரூர் முன்பதிவற்ற சிறப்பு விரைவு ரயிலானது (06115) வருகிற மார்ச் 31 வரை 3 மாதங்களுக்கு (ஞாயிற்றுக் கிழமைகளைத் தவிர) இயக்கப்படுகிறது. இந்த ரயிலானது ஏற்கனவே இயக்கப்படும் கரூர்- சேலம் ரயிலுடன் (76827 (06836) மேற்கண்ட காலத்துக்கு இணைத்து இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் திருச்சியிலிருந்து காலை 5-25 மணிக்கு புறப்பட்டு கரூருக்கு காலை 7.20 க்கும், கரூரிலிருந்து காலை 7.30 மணிக்கு புறப்பட்டு சேலத்துக்கு காலை 9.45 மணிக்கும் சென்றடைகிறது. மறுமார்க்கமாக ஏற்கனவே இயக்கப்படும் சேலம் – கரூர் ரயிலுடன் (76823 , 06837) புதிதாக கரூர்-திருச்சி முன்பதிவற்ற சிறப்பு விரைவு ரயிலானது (06116) வருகிற மார்ச் 31 வரை மூன்று மாதங்களுக்கு (ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர) இணைத்து இயக்கப்படுகிறது. இவை சேலத்திலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு, கரூருக்கு இரவு 7-45 க்கும், கரூரிலிருந்து இரவு 8.05 க்குப் புறப்பட்டு திருச்சிக்கு இரவு 10.50 மணிக்கும் வந்தடையும். 17 பெட்டிகளாக மாற்றப்பட்ட திருச்சி- கரூர் டெமு ரயிலானது (76824), (05938), கரூர்- சேலம் ரயிலுடன் இணைத்து இயக்கப்படுகிறது. இவை திருச்சியிலிருந்து மாலை 6 மணிக்குப் புறப்பட்டு கரூருக்கு மாலை 6 மணிக்கும், கரூரிலிருந்து இரவு 8.05 ககுப் புறப்பட்டு சேலத்துக்கு 9.40 க்கும் சென்றடையும். மறுமார்க்கமாக, சேலம்- கரூர் டெமு ரயிலானது (76821 (06831), கரூர்- திருச்சி ரயிலுடன் (76810 (06124) இணைத்து இயக்கப்படுகிறது. இவை சேலத்திலிருந்து காலை 5.20 மணிக்குப் புறப்பட்டு கரூருக்கு காலை 7.15 க்கும், கரூரிலிருந்து காலை 7.20 க்குப் புறப்பட்டு திருச்சிக்கு காலை 9.35 மணிக்கு வந்தடையும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded
Comments are closed.