திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் ரோட்டரி கிளப் திருச்சிராப்பள்ளி பட்டர்பிளை இணைந்து நடத்திய மகளிர் தின கொண்டாட்டம் இன்று(07-03-2024) காலை ஜோசப் கண் மருத்துவமனை அரங்கில் நடைபெற்றது. இதில், எக்ஸெல் துணை தலைவர் கே.எஸ்.வித்யா உள்பட 33 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு “பெண் சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது. இதில், சிறப்பு விருந்தினராக திருச்சி தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையை சேர்ந்த பேராயர் டாக்டர் எஸ்தர் சாம்ராஜ் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
மேலும், பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் லட்சுமி பிரபா, ஜோசப் கண் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பிரதீபா ஆகியோர் பெண்களுக்கான சிறப்பு தனித்துவ செய்தியை வழங்கினர்.
விழாவில், மருத்துவமனை நிர்வாகிகள் சுபா பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.