திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முன்னாள் அதிபரும், முதல்வருமான முனைவர் ஜான் பிரிட்டோ ( வயது 78) நேற்று ( 13.10.2023 ) காலமானார். உடல் நலக்குறைவு மற்றும் வயது முதிர்வின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மாலை 5.15 மணி அளவில் காலமானார். அவரது உடல் ஜோசப் கல்லூரியின் சேசு சபை தந்தையா்கள் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கிழக்கு மாநகர திமுக செயலாளர் மதிவாணன் மற்றும் பகுதி செயலாளர் மோகன் ஆகியோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மேலும் அவரது உடலுக்கு அரசியல் கட்சி பிரமுகர்களும், சேசு சபையின் அருட்சகோதரர்கள் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று சனிக்கிழமை மாலை 3 மணியளவில் கல்லுாாியின் லுாா்து அன்னை ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு இறுதிச்சடங்கானது ஆலயத்தின் பின்புறம் உள்ள கல்லறையில் நடைபெறும் என்று கல்லுாாியின் அதிபா் பவுல்ராஜ் மற்றும் முதல்வா் ஆரோக்கியசாமி சேவியா் ஆகியோா் தொிவித்துள்ளனா். முன்னாள் அதிபரான ஜான் பிரிட்டோ தாவரவியல் வல்லுனா் ஆவாா். மேலும் இவா் கல்லுாாியின் தாவரவியல்த்துறை பேராசிாியராகவும், கல்லுாாியின் அதிபராகவும், முதல்வராகவும், செயலாளராகவும் மற்றும் பல்வேறு பொறுப்புகளை வகித்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.