Rock Fort Times
Online News

மஹாளய அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்…(படங்கள்)

போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் தவிப்பு..

ஆண்டுக்கு 12 அமாவாசைகள் வந்தாலும் தை, ஆடி, புரட்டாசி மாதங்களில் வரும் மஹாளய அமாவாசைகள் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மஹாளய அமாவாசையில் இறந்த தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் அவர்கள் ஆன்மா சாந்தியடையும், அவர்களின் ஆசி குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கிட்டும் என்பது ஐதீகம். எனவே மஹாளய அமாவாசை தினத்தில் நீர் நிலைகளில் குறிப்பாக கடற்கரை மற்றும் ஆற்றங்கரைகளில் பொதுமக்கள் இறந்த தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அந்தவகையில் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் இன்று ( 14.10.2023 ) அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள படித்துறையில் வாழை இலை விரித்து இறந்த தங்கள் முன்னோர்களுக்கு சாதம்,எள்ளுருண்டை, பழம், பூ வைத்து தர்ப்பணம் கொடுத்து வழிபட்டு வருகின்றனர்.வழக்கத்தை விட இவ்வாண்டு பொதுமக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் பொருட்டு ஸ்ரீரங்கம் சரக காவல்துறை உதவி ஆணையர் நிவேதா லட்சுமி தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், மாம்பழச்சாலை அம்மா மண்டபம் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு வாகனங்கள் திருப்பி விடப்படுகிறது.  இதனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

                 

வாகனங்களை நிறுத்த இடமில்லாது அலை மோதுகின்றனர். அம்மா மண்டபம் சாலையில் தனியாருக்கு சொந்தமான காலியிடங்கள் பல உள்ளது.போலீசார் இட உரிமையாளர்களிடம் பேசி வாகனங்களை நிறுத்துவதற்கு அனுமதி பெற்றிருந்தால் இது போன்ற போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்காது. இதனால் பொதுமக்கள், பக்தர்கள் சுமார் இரண்டு கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்