திருச்சி நகைச்சுவை மன்றம் 25-வது ஆண்டு துவக்க விழா மற்றும் பேராசிரியர் அப்துல் காதருக்கு பாராட்டு விழா…
24ம் தேதி நடக்கிறது...
திருச்சி நகைச்சுவை மன்றத்தின் 25வது ஆண்டு துவக்க விழா மற்றும் பவள விழா நாயகர் பேராசிரியர் அப்துல் காதருக்கு பாராட்டு விழா ஆகியவை திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள ஸ்ரீமதி இந்திரா காந்தி மகளிர் கல்லூரியில் 24-12-2023 தேதி( ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. விழாவிற்கு திருச்சி அம்மன் ஸ்டீல்ஸ் கம்பெனி மேலாண்மை இயக்குனர் மு.சோமசுந்தரம் தலைமை தாங்குகிறார். திருச்சி நகைச்சுவை மன்ற பொருளாளர் பாலசுப்ரமணியன் வரவேற்றுப் பேசுகிறார். பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், ஸ்ரீமதி இந்திரா காந்தி மகளிர் கல்லூரி செயலாளருமான கு.மீனா, துறையூர் சௌடாம்பிகா கல்வி குழுமங்களின் தலைவர் எஸ்.ராமமூர்த்தி, தில்லை நகர் ராக்போர்ட் நியூரோ சென்டர் மூளை நரம்பியல் நிபுணர் மருத்துவர் அ.வேணி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
விழாவில், நாடாளுமன்ற மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா எம்.பி., மதுரை நகைச்சுவை மன்ற தலைவர் முனைவர் கு. ஞானசம்பந்தன், கலைமாமணி சுகிசிவம், திருவாரூர் தமிழ்ச்சங்க தலைவர் இரெ.சண்முகவடிவேல், திருச்சி கம்பன் கழகச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மாது, திரைப்பட பாட லாசிரியர் நெல்லை ஜெயந்தா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். பாராட்டுக்கு நன்றி தெரிவித்து பேராசிரியர் அப்துல்காதர் ஏற்புரையாற்றுகிறார். திருச்சி நகைச்சுவை மன்ற செயலாளர் சிவகுருநாதன் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிறார். அறங்காவலர்கள் நவிலு எம்.சுப்ரமணியன், பயோனீயர் ஜி.சங்கர், கலாவதி சண்முகம், கௌரி ஜெகதீசன் ஆகியோர் அனைவரையும் வரவேற்கிறார்கள். திருச்சி நகைச்சுவை மன்ற புரவலர் சுவாதி எஸ்.தியாகராஜன் நன்றி கூறுகிறார்.
மு. பொன்னிளங்கோ, லால்குடி எஸ். ஆர்.ஜி. சீத்தாராமன், லால்குடி ரா.மணிகண்டன், கவிஞர் இளஞ்சேட் சென்னி, மணி கார்ப்பரேஷன் எஸ்.பி.சுப்ரமணியன், மணி பிரிண்டர்ஸ் சோ.சுப்ரமணியன், வி.ஜெ. சரண்குமார், சி.சபாபதி, செ.அருண் ஆகியோர் விழாவை வழி நடத்துகின்றனர். விழாவில் திருச்சி நகைச்சுவை மன்ற செயலாளர் க. சிவகுருநாதன் எழுதிய “மேடை வசப்படும்” என்ற நூல் வெளியீட்டு விழாவும் நடக்கிறது. இதன் மீடியா பார்ட்னர்களாக திருச்சி அம்மன் டிஎம்டி பார்ஸ், பிராணா, புணர்வாழ்வு மையம், ராக்போா்ட் நரம்பியல் மையம் , ஸ்டார் டோட்லர்ஸ் ப்லே ஸ்கூல், ரம்யாஸ் ஹோட்டல்ஸ், என்.ஆர். ஐஏஎஸ் அகாடமி, மணி கார்ப்பரேஷன் டைல்ஸ் மற்றும் ஷோரூம், ராம்ராஜ் காட்டன், காஸ்மிக்ஸ் ஆர்ட் கேலரி மற்றும் கிராஃப்ட், தி பிரிண்டிங் ஹவுஸ், நவநீதா பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் ஆகியோர் உள்ளனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.