திருச்சி மாநகராட்சி 33 -வது வார்டில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி…
துணைமேயர் திவ்யா தனக்கோடி நேரில் ஆய்வு..
திருச்சி மாநகராட்சி மண்டலம்-2, வார்டு எண் 33-க்கு உட்பட்ட எடத்தெரு மெயின் ரோடு , தெற்கு பொட்டுகார தெரு, வடக்கு பொட்டுகார தெரு மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று திருச்சி மாநகராட்சி சார்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி 18.12.2023 அன்று காலை தொடங்கப்பட்டது. இந்த பணியை மாநகராட்சி துணை மேயர் ஜி.திவ்யா தனக்கோடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பணியை விரைவாகவும், தரமாகவும் முடிக்க அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர் இப்ராஹிம் , இளநிலை பொறியாளர் சுந்தர்ராஜ், தூய்மைப் பணி மேற்பார்வையாளர் தண்டபாணி, சத்யசீலன் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் , பொதுமக்கள் உடனிருந்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.