Rock Fort Times
Online News

சென்னையில் ஐ.எஸ். பயங்கரவாத தலைவர் கைது…

முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

திருச்சூரை சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையது நபில் சென்னையில் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுவது, பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டது விசாரணையில் தெரிய வந்தது. போலி ஆவணங்கள் மூலமாக நேபாள நாட்டிற்கு தப்பி செல்ல முயன்ற போது என்.ஐ.ஏ. அதிகாரிகள் சுற்றி வளைத்து அவரை கைது செய்தனர். தமிழ்நாடு, கர்நாடகா என மாறி, மாறி தலைமறைவாக இருந்த சையது நபில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்