Rock Fort Times
Online News

திருச்சி பேருந்து  நிலையங்களை  மேயர் மு.அன்பழகன் ஆய்வு…

திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைகளை திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு  செய்தார். அப்போது கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்கவும், 2 மணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் விட்டு சுத்தம் செய்யுமாறும்  அறிவுரை கூறினார். மேலும், கட்டண கழிப்பறையில் மாநகராட்சி நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என ஒப்பந்தக்காரர்களுக்கு உத்தரவிட்டார். முன்னதாக மத்திய பேருந்து நிலையத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவின் மேற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நவீன கழிப்பறை கட்டும் பணியினை ஆய்வு செய்த அவர், பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது மண்டலத் தலைவர் துர்காதேவி, உதவி ஆணையர் சண்முகம், செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், கவுன்சிலர் கலைச்செல்வி ஆகியோர் உடன் இருந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்