Rock Fort Times
Online News

திருச்சி அரியமங்கலம் பகுதி திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…

திருச்சி தெற்கு மாவட்ட திமுக அரியமங்கலம் பகுதி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அரியமங்கலம் பகுதி செயலாளர் ஏ.எம்.ஜி.விஜயகுமார் தலைமை வகித்தார் ‌. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் தினகரன் மற்றும் மாநகர வழக்கறிஞர் அணி அமைப்பாளர் எம்.பன்னீர்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் வருகிற 14ம் தேதி திருச்சி குடமுருட்டி பகுதியில் 100 அடி உயர திமுக கொடியேற்று விழாவிற்கு வருகை தரும் பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது கலைஞர் அறிவாலயத்தில், திருவெறும்பூர், மணப்பாறை கிழக்கு தொகுதிகளை சேர்ந்த பேரூர் கழக செயலாளர், ஒன்றிய செயலாளர், நிர்வாகிகள், அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்