Rock Fort Times
Online News

திருச்சி, ‘அன்பே பெரிது’ தொண்டு நிறுவன தலைமை சபை தலைவர் சி.முத்து ஆபிரகாம் இல்ல திருமண விழா..!- இன்று கோலாகலமாக நடைபெற்றது..!

திருச்சி, வரகனேரி, தர்மநாதபுரம், ‘அன்பே பெரிது’ தொண்டு நிறுவன தலைமை சபை தலைவர் சி.முத்து ஆபிரகாம் – எம்.மரிய வசந்தி ஆகியோரது மகள் எம்.ப்ரீத்தி கிளமென்சியா, திருச்சி மல்லிகைபுரம், ஐ.ஞான் ராஜ் கென்னடி – ஜி.தனம் பாத்திமா இணையரின் மகன்.ஜி ரெக்ஸ் ஆகியோரது திருமணம் திருச்சி, ஜங்ஷன் அருகே உள்ள எல்.கே.எஸ் அரிஸ்டோ மஹாலில் இன்று(22-05-2026) நடைபெற்றது. திருச்சி
ராக்போர்ட் டைம்ஸ் தமிழ் வார இதழ் முதன்மை செய்தி ஆசிரியர் எஸ்.ஆர்.லட்சுமி நாராயணன் தலைமை வகித்து மங்கல நாண் எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். இவ்விழாவில் ஆந்திர பிரதேச கிறிஸ்து பிரன்ஹாம் சூப்பர் சர்ச் போதகர் ஏ.ஜோசப் பிரன்ஹாம், ராஜபாளையம் திருச்சி,கிறிஸ்து பிரன்ஹாம் எட்டாவது கிளை சபை போதகர் ஜி.குருசாமி கிதியோன், சபை மூப்பர் எம்.குமார் பவுல் ஆகியோர் திருமண ஆராதனை செய்தனர். இதில் ஆதித்தமிழர் கட்சித்தலைவர் கு.ஜக்கையன், முதன்மை குரு எல்.அந்துவான் அடிகளார், திருச்சி எடத்தெரு பழைய கோவில் பங்குத்தந்தை அருட் சகோதரர் டி.தாமஸ், திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயர் ஜெ..சீனிவாசன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் எஸ்.ஆர்.கிஷோர் குமார், திருச்சி மாநகர் மாவட்ட தமிழக வெற்றி கழக செயலாளர் குடமுருட்டி கரிகாலன், திரைப்பட நடிகர் ஜெரால்டு மில்டன், திருச்சி மாவட்ட நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் டி.ஓம்.பிரகாஷ், காவல் ஆய்வாளர் ஏ.ஞானசேகர், பெரம்பலூர் மாவட்ட மின்வாரிய ஜூனியர் இன்ஜினியர் சேகர், பந்தல் ஜே.ஆர்.ஆனந்த், ஏ.அனிதா மேரி, ஏ.அன்னை தெரசா, கோல்டன் என்.இப்ராஹிம்ஷா மற்றும் திருச்சியின் முக்கிய தொழில் அதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அலுவலர்கள், குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்