திருச்சி, உப்பிலியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் சந்திர போஸ் இவரது மனைவி ரமா (வயது 30). இவர் அங்குள்ள ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியிடத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். உப்பிலியபுரம் மூப்பனார் கோவில் தெரு பகுதியை சேர்ந்த பாரதிராஜா( 35), அவரது மனைவி மோகனப்பிரியா( 32 )ஆகியோர் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தாமதமாக வேலைக்கு சென்றனர். இது குறித்து ரமா தனது மேலதிகாரிக்கு தகவல் கொடுத்தார். அவர் பாரதிராஜா மற்றும் அவரது மனைவியை அழைத்து திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாரதிராஜா, தனது மனைவியுடன் ரமாவின் வீட்டுக்குச் சென்றார். பின்னர் அவரிடம் தகராறு செய்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரமாவை குத்திவிட்டு தப்பி சென்றார். இதில் அவரது வலது கையில் படுகாயம் ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ரமா உப்பிலியபுரம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் பாரதிராஜா மற்றும் அவரது மனைவி மோகனப்பிரியா ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.