Rock Fort Times
Online News

திருச்சியில் துயர சம்பவம்: மகன் கண் முன்னே தனியார் பேருந்து மோதி தாய் பலி…!

திருச்சியை அடுத்த சோமரசம்பேட்டை அதவத்தூர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி கண்ணம்மா (வயது 80). இவர்களது மகன் கோவிந்தராஜ்.
இவர் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் , இன்று (9-11-2024) தனது இரு சக்கர வாகனத்தில் தாயை
ஏற்றிக்கொண்டு மெயின்கார்டுகேட் நோக்கி கோவிந்தராஜ் சென்றுகொண்டிருந்தார். பிஎஸ்என்எல் அலுவலக சாலையை கடந்து மேலப்புதூர் சாலையில் அவர்கள் சென்றபோது சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி சென்ற தனியார் பேருந்து திடீரென இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் கோவிந்தராஜ், கண்ணம்மா இருவரும் நிலைதடுமாறி சாலையில் விழுந்தனர். அப்பொழுது பின் சீட்டில் அமர்ந்திருந்த கண்ணம்மா தூக்கி எறியப்பட்டு தனியார் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார். கோவிந்தராஜ் காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கண்டோன்மென்ட் தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்ணம்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து கண்டோன்மென்ட் தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் கண் முன்னே தாய், பேருந்து சக்கரத்தில் சிக்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்