Rock Fort Times
Online News

திருச்சி சிட்டி பகுதியில் வருகிற 21-ம் தேதி குடிநீர் விநியோகம் ரத்து…!

திருச்சி மாநகராட்சி ஆணையர் வீர பிரதாப்சிங் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை மற்றும் பொதுதரைமட்ட நீர்தேக்க தொட்டி ஆகிய நீரேற்று நிலையங்களுக்கு ஸ்ரீரங்கம் (110/11KV) துணை மின் நிலையத்திலிருந்து மின் சப்ளை வழங்கப்பட்டு வருகிறது. இந்த துணை மின் நிலையத்தில் நாளை (20.06.2026) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக மேற்கண்ட நீரேற்று நிலையங்களிலிருந்து குடிநீர் செல்லும் இடங்களான மத்திய சிறைச்சாலை, சுந்தராஜ நகர், ஜே.கே. நகர், செம்பட்டு, காஜாமலை, ரெங்காநகர், சுப்ரமணிய நகர் புதியது, வி.என். நகர் புதியது, தென்றல் நகர், கவிபாரதி நகர், காமராஜ் நகர், கிராப்பட்டி, அன்புநகர், எடமலைப்பட்டிபுதூர், பஞ்சப்பூர், அம்மன் நகர், இபி காலனி , அரியமங்கலம், மலையப்ப நகர், ரயில்நகர், முன்னாள் இராணுவத்தினர் காலனி, மேல கல்கண்டார் கோட்டை, செக்ஸன் ஆபிஸ், நாகம்மைவீதி, நூலக பகுதி, பொன்னேரிபுரம், அம்பேத்கர் நகர், விவேகானந்தர் நகர், எல் ஐ சி. காலனி புதியது, விஸ்வநாதபுரம் கே.சாத்தனூர், ஆனந்த் நகர், சுப்ரமணிய நகர், சத்தியவாணி கே.கே.நகர், அம்மா மண்டபம், ஏஐபிஇஏ, பாலாஜி அவன்யூ, தேவி பள்ளி, மேலூர், பெரியார் நகர் , திருவானைக்காவல், தேவதானம், விறகுப்பேட்டை, மகாலட்சுமி நகர், சங்கிலியாண்டபுரம், கல்லுக்குழி, அரியமங்கலம் உக்கடை, ஜெகநாதபுரம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில்
குடிநீர் விநியோகம் 21-6-2026 ஒரு நாள் இருக்காது. 22 ம் தேதி முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் அதில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்