வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு தலைமையில் நடந்தது...
திருச்சி சத்திரம் பஸ் நிலைய மாநகராட்சி கடை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருச்சி மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாநில பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜுலு தலைமையில் நடைபெற்றது. வியாபாரிகளால் செலுத்த இயலாத அளவிற்கு அதிக வாடகை நிர்ணயிக்கப்பட்டதால், வாடகை செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் மாநகராட்சி நிர்வாகம் சில கடைகளுக்கு சீல் வைத்தது தொடர்பாக, கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதர், மாநகர தலைவர் எஸ்.ஆர்.வி.கண்ணன், மாநில இணைச்செயலாளர் எம்.கே.கமலக்கண்ணன், மாவட்ட செய்தி தொடர்பாளர் ப.திருமாவளவன், சத்திரம் பஸ் நிலைய மாநகராட்சி கட்டிட கடை வியாபாரிகள் சங்க செயலாளர் ராயல் சேட்டு மற்றும் பரமசிவம், ‘குணா’ சுரேஷ், சிக்கந்தர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.