போலீசார் விசாரணை திருச்சி சுப்பிரமணியபுரம் ஔவையார் தெருவைச் சேர்ந்தவர் குமரவேல் (வயது50). இவர் கடந்த 18 ந்தேதி இவர் வீட்டருகே வேனை நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் வந்து பார்த்தபோது வேனை காணவில்லை, மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து குமரவேல் கே.கே நகர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து வேனை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Comments are closed.