Rock Fort Times
Online News

திருச்சியில் லாரி டிரைவர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு ! 4 பேர் கொண்ட கும்பல் தப்பி ஓட்டம் !

திருச்சி கருமண்டபம் சக்தி நகர் 9-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் சோலை பாண்டியன் ( வயது 60 ). காந்தி மார்க்கெட்டில் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மல்லிகா.இவர்களது மகன் சுரேஷ் குமார்.கார் மெக்கானிக்.  இவர்கள் மூன்று பேரும் நேற்றிரவு சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கினர். அப்போது நள்ளிரவு 12 மணி அளவில் சுரேஷ்குமாரின் படுக்கை அறை பகுதியில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது.  அதிர்ச்சி அடைந்த அவர் திடுக்கிட்டு எழுந்த போது அந்த அறையின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து கிடந்தது கண்டு பீதி அடைந்தார். பின்னர் பார்த்தபோது ஜன்னல் திரை எரிந்து கிடந்தது. உடனே இது பற்றி சுரேஷ்குமார் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில்  உதவி போலீஸ் கமிஷனர் ஜெயசீலன், சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், தீபாவளி பண்டிகையின் போது ஏற்பட்ட மோதலில் சோலை பாண்டியனின் மனைவி மல்லிகாவின் சகோதரர் கோபால் கொடுத்த புகாரின் அடிப்படையில் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவவரை போலீசார் கைது செய்தனர் .மேலும் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த முன் விரோதம் காரணமாக நாட்டு வெடிகுண்டு வீசி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவம் கருமண்டபம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.இது தொடர்பாக கண்டோன்மென்ட் போலீசார் அப்பகுதியில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்